பயணத்தில்
சூடு பறக்குற சாயா
ஒரு புறம் நறுமணப்
பூவை விக்கிற ஆயா.
ஓடி விளையாடுற குழந்த
நாக்கு நல்ல
ருசிய தருமந்த எலந்த.
தூரத்தில் தெரியுது மலை தான்
அழகிய இயற்கைக்கு
இது பெரும் கலைதான்
செம்மண் வாசம் வீசுற பூமி
மாலை நேரச்
செங்கதிர் வானக் காமி
மேல பறந்த அந்நேரம்
கீழே பாத்தேன்
ஊரே ஒரு புள்ளி கோலம்
நிலவ பார்க்கிற போதும் அந்த
விண்மீன் படை வியப்பினை கூட்டும்
நிமிர்ந்து நடந்திடும் போதும்
தரை நகர்வதை என் கால் காட்டும்
எல்லை இல்லா தொலைவின்
வண்ணம் நீலம்
அடர் இருளது விடியும் வரை தான் நீளும்.
Comments
கீழே பாத்தேன்
ஊரே ஒரு புள்ளி கோலம்
அருமை