மாறுவோம்
எல்லோரும் இங்கெல்லாமுமாக நினைக்கிறோம்
ஆனால் நாம் அதற்காகவா பிறக்கிறோம்
இல்லாரோடிவ் வுலகில் தான் வாழ்கிறோம்
இருப்பதை இறைக்க எங்கு நினைக்கிறோம்
மீதத்தை வீதம் பிரித்து
மறைத்து சேர்க்க பார்க்கிறோம்
பஞ்ச பூதத்தை நாம் மறந்து
பாவத்தை செய்கிறோம்
நெஞ்சத்திற் கழுக்கை தந்து புழுவாக ஆகிறோம்
ஆனால் அதற்கு மாறாக மண்ணிற்கும் பயனன்றி வாழ்கிறோம்.
மாற்றான் மன உறுதி கண்டு
நம் மன நிம்மதி இழக்கிறோம்
அவன் குருதி சிந்தும் வேளையில்
ஈகை மறந்து இன்முகத்தோடு இருக்க நினைக்கிறோம்
இப்படியே இருந்து இருந்து
இழந்து தொலைக்கும் வாழ்க்கையில்
அன்பு நெறி இன்பமுகம் ஒழுகி தினம்
ஒழுக்கத்தோடு வாழுவோம்.
Comments