இது தான் இயற்கை
அங்கங்கே அழகான
வான்முகில் கூட்டம்
அதை கண்டு ஆடுகிற
அழகு மயிலாட்டம்
வீசாதோ என்றந்த
தென்றல் மேல் நாட்டம்
அதிர்வுகளால் ஆடாத குளமோ
அழகாக வின் பிம்பங்காட்டும்
விழுதோ வேரோ
எதுவென தெரியாதிருக்கும்
பலர் அதன் நிழலில் நிற்கும் போதே
அதற்கும் மதிப்பிருக்கும்
தேயாத நிலவெனில்
நினைக்காமல் இருந்திருப்போம்
முழு இரவும் முழு நிலவும் ஆனதனால்
மனதோடு மயக்கந் தரும்
சாலையில் காலடி
எடுத்து வைக்கிறோம்
இருந்தும் அங்கே
நகர்வது தரைபோல்
பிம்பம் நீரில் நாமும் பார்க்கிறோம்
அருகில் பார்த்தால் அது அங்கில்லை.
இது தான் இயற்கை.
Comments