மனிதனுக்கும் இயற்கைக்கும்

பாதி அழிந்து மீதியாய் 
வீதியோரம் வளர்கிறது
ஊரெங்கும் வெளிச்சத்தில்
இருட்டொன்றே இருக்கிறது

ஜாதி மனிதனின் பிறப்பிலென்று 
சமகாலக் கூற்றாகுது
ஆதி மனிதன் வாழ்ந்ததை
நாகரிகம் தூற்றுது

சாளரத்தின் வழியாக
சாரல் வந்து வீசுது 
மழையோனு எதிர் பார்த்த போது
ஈரத்துணி காத்துல தன்னால காயுது

துடுப்பின்றி காற்றோடு 
கடலோடும் படகாடுது
திசை தெரியாமல் போகும் போது
கரை சேர்க்கும் அலையும் அழகாகுது

பொது வென்று எண்ணிவிடு
உனதுட்பட அதிலுண்டு
உனதென்று எண்ணாதே
பொதுவுடமையை நீ உண்டு

பாசத்தில் மாட்டாமல் 
பற்றின்றி விலகு
அப்போதே உனை பற்றும்
இப் பரந்த பூவுலகு

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை