காகித கப்பல்
ஏனோ தெரியவில்லை
ஏக்கம் தாங்கவில்லை
தாக்கம் குறையவில்லை
மனதும் தூங்கவில்லையே
உண்மை புரியவில்லை
ஆசை ஓயவில்லை
ஆவல் குறையவில்லை
மறக்கவும் முடியவில்லையே
காதல் கிடைப்பதில்லை
காலம் அழிவதில்லை
நினைவை இழக்கவில்லை
நிழல் கூட தொடர்வதில்லையே
அது
தாளில் செய்து
தானாய் நகர்ந்த
காணாமல் போவதற்காய்
ஊரிப்போக காத்திருந்த
நீரில் விட்ட காகித கப்பல்
Comments