விருப்பமா
விரும்பாத வாழ்க்கையில்
விரும்பிட தான் எத்தனை,
துரும்பாகி போனாலும்
துரத்தும் காந்தம் எத்தனை.
காந்தம் உடையும் போதிலே
மீண்டும் சேர மறுக்குதே,
மன முடைந்த மனிதனுக்கு மட்டுமிங்கு
மீண்டும் ஆசை பிறப்பதேன்.
தீண்டும் யாவுமிங்கு
ஆசை தூண்டி செல்லும்,
அதை தாண்டி வாழப் பழக
சில தடைகள் தந்து செல்லும்.
விடைகள் சொல்லும் வாழ்க்கை
தேவையை மட்டுமே தேடலாக்க சொல்லும்.
அலைந்து திரிந்து தேடும் யாவும் தேவையாகிடாது
அலைய வைக்கும் யாவும்
யாவருக்கும் தேவைபட்டிடாது.
Comments