துணை செய்க திருத்துணையே
உறவென்று சொல்வதா
உயிரென்று சொல்வதா
உடன் வருவோன்/ள் என சொல்வதா
உடன் படுவோர்/ள் என சொல்வதா
அறியாமலும் தெரியாமலும் ஆறுதலுரைப்பார்
தோள் மீது கையிட்டு தோள் தந்திடுவார்
தோல் கொண்ட உடலுக்கு மேல் கவசமாகி
உடைகாக்கும் மானம் போல் உயிர் காத்து நிற்பார்
துணிவாக இருப்பார் நமக்குறுதுணை யோடுமிருப்பார்
வாழ்க்கை எனும் புத்தகத்தில் தாள்களாகும் இவர்கள்
வரும் தயக்கத்தை தகர்த்தெரியும் வாள்களாகிருப்பார்
உருவறியா தெய்வம் போல்
உயிர் தந்த அன்னை போல்
வழிகாட்டும் ஆசானாய்
வழிநடத்தும் நண்பனாய்
செல்வம் சேர்க்கும் தந்தையாய்
செல்ல குட்டி குழந்தையாய்
பட்டறிவு பாட்டுரைக்கும் பாட்டன் பாட்டியாய்
தாலியில் உயிர் தாங்கும் தர்ம பத்தினியாய்
யார் தான் நிலைத் துணை
எனத் தெரியாது
ஆதலால் அத் துணைக்கும் துணை செய்க
திருத்துணையே.
Comments