இயற்கையும், காதலியும் இவ்வகையே
ஆறுத லுரைப்பதும் அவளே
அழ வைப்பதும் அவளே
கேட்க வைப்பதும் அவளே
விட்டுகொடுக்க வைப்பதும் அவளே
எண்ணத்தில் உதிப்பதும் அவளே
இதயத்தில் உதைப்பதும் அவளே
எழில் மிகுந்தவளே
ஏங்கத் தகுந்தவளே
இமைக்குள் இனிமை தந்தவளே
விழிப்பில் கனவென கலைந்தவளே
விதை க்கும் மண்ணெனும் கல் லறை ஆனேன்
என்னிலிருந்து முளைத்து எனக்கே
புல்லெனும் கல்லறை ஆனவளே
உனை அறுத்தெரிவோர் இருந்தாலும்
உதிரும் உன் வித்துக்குயிர் தர நானிருப்பேன்
காலமும் காதலும் மாறிவிடும்
கருவான இயல்பது மாறாது
உலகத்தில் இயற்கையாய்
உள்ளத்து காதலியாய்.
Comments