சமநிலையில் சந்தித்தேன்
மரணம் முடிவே இல்லையடா
மனமது மனிதனுக் குள்ளவரை
இருவகை எண்ணம் ஆட்கொள்ள
பற்றில்லா அந் நிலையொன்றோ
மனிதனான என்னை சமநிலை ஆகச் செய்யும்
சோறும் நீரும் தேவைபடும் வரையில்
ருசியும் பசியும் நம்மை வழிநடத்தும்
கடந்து போக நினைக்கையிலே
கடமையை எண்ணிப் பார்க்கையிலே
அதுவும் என்னை கட்டிப் போட்டுவிடும்
மன்னை விட்டு மடியும் முன்னே
இறைவா என்னை நீ வழி நடத்திச் செல்
இறையா யாக்கி செல்லாமல்
உருப்படும் உரமாய் மாற்றிச் செல்
அதுவே நீ தரும் எனக்கோர் பெரும் வரமாகும்.
சங்கடங்களை நான் தவிர்த்தேன்
சிந்தனையால் உன்னை சந்தித்தேன்
என்னை நோக்கி எந்நிலை வந்தாலும்
சமநிலையில் உன்னை சந்தித்தேன்.
Comments