ஒரு தலை காதல்
ஒற்றை வார்த்தையை கேட்கவும்
அவள் விழி என்னை பார்க்கவும்
புலன் மொழியில் பேசுவோம்
புன்சிரிப்பில் நாணுவோம்
மனம் கணத்து போகிட காரணம்
அவள் அருகில்லை எனும் நினைப்பா
இல்லை நம்மை பாடாய் படுத்திடுமிந்த
பணத்திடம் உள்ள பிணைப்பா
தேடி வருகையில்
ஓடி ஒளிகிறாய்
காணல் நீராய்
காணாமல் போகிறாய்
வாழ்வு மட்டுமல்ல
விருப்பமும் ஓர் பயணம் போல தான்
தொடக்கத்தில் மகிழ்வாகவும்
முடிகையில் வலியாகவும்
கசாப்பு கடை ஆடுகள் கூட
கத்திக் கொண்டே மடிகிறது
காதல் சொல்ல வார்த்தை இன்றி
ஒரு தலை காதலும் மட்டும்
மௌனத்திலேயே முடிவது ஏன்.
Comments