தொடரியிலிருந்து இறங்கி தொடருது பயணம்
ஓடிக் கொண்டே இருப்பதெல்லாம்
ஓர் நாள் ஓய் வெடுத்து விடும்
இயற்கையுடன் ஓர் பந்தயத்தில்
நாங்களும் இங்கு பங்கு கொண்டோம்
செயற்கைக்கு துணை ஆகி நின்றோம்
தொடரி பெட்டியில் நாங்கள் தொற்றி கொள்ள
தொடங்கிய ஓட்டப் போட்டியிலே
தொடரி முன் தொடர்ந்தோடியது
இயற்கை பின்னோடியது
வென்று விட்டோம் என இறங்குகையில்
இன்னும் சிலரதில் பயணம் செய்ய
கண்ணோட்டம் மாறியது
எழில் மிகுந்த வளங்கள்
நிலையாக இருந்திடவே
தொடரி இங்கு தொடர்கதை யாகிறது
இயற்கை தந்த செயற்கையில்
இயற்கைக்கு சதி ஆகிறது.
Comments