துறவு
முக்கால் துறந்த முனிவர்கள்
முக்கிற்கு முக்கு முப்பது பேர்
இத்தனை இருந்து என்ன செய
காமக் காலை கடக்கக் கால் முயலலையே
சிந்தனை துளிர்ந்த சித்தர்களோ
பலர் சந்துக்குள்ளே சங்கமிப்பார்
சித்தம் தெளியும் சமயத்திலே
சிக்கித் தவிப்பதை தாண்டத் துணியலையே
ஆழமாய் அறியும் முனைப்பிருக்க
ஆனிவேரிருப்பதை அறிந்திடலாம்
வேரில் பாதிப்பு உள்ளதெனில்
விரலின் நகம்போல்
நல்வேருக்கு குறையுடை வேரை மட்டும் வேரறுப்போம்.
விதையில் கோளா றுள்ளதென்றால்
கவலை கொள்ள தேவையில்லை
காலம் கடந்ததும் உரமாகி
எங்கும் நமக்குறுதுணை செய்யும்.
Comments