' திருத்தி வழி நடத்த ' ' துரத்தல் தவறில்லை '
நீ பெண்ணெனும் தீயானாய்
புகைப்பானாகி நின்றேன்
காற்றெனும் காதலில் கரைந்து
வாழ்வை இழந்துவிட்டேன்
உள்ளே அழுகை எனக்காய்
ஒரு ஆறுதலுரைக்கிறது
காமம் என்தன் கண்ணை
கட்டி கூட்டிபோகிறது
இருட்டு உலகில் நடக்கு
குருட்டு மனம் துடிக்க - இருளின்
சாம்பல் நிறத்தொரு ஒளியில்
எனக்கும் வழிகிடைக்க
விழியை கட்டிய காமம்
அவ்விருளிலும் வழி கொடுக்க
எனை திருத்தி வழிநடத்த
எத்தவறும் எனை துரத்தி
வருவது தவறில்லை.
Comments