ரசனை
கோடி கண் கொண்ட இரவினிலே ஒற்றை விழியின் பளிங்கொளி - நிலவு
தொடுவதிலே நுறை தள்ளும்
தொட்டணைக்க கரை துள்ளும் - கடல்
உருவில்லா உணக்கு
உயிர் எதுவோ உலவுவதால் - காற்று
எழுத்தறியாத உனக்கே
வாயும் மொழியும் பல்லாயிரம் - இசை
குறுகிய வட்டத்தில் ஓடும்
பலரது திட்டத்தின் அமைச்சரோ - கடிகார நேரம்
அவன் படுத்தே தான் கிடப்பான்
தலை உடலில்லாது நம் தலைக்கு மேலே. - வானம்
வெற்று சபையில்
வெற்றி பெற்றவனாய் ஒளிர்கிறான் - நட்சத்திரம்
முகவரி இன்றி முகதுதி அமையும்
முகமாய் அவனுக் கெது அமைந்திடுதோ - ரசனை.
Comments