எல்லாம் அவனே ஆனால் அதில் அவனில்லை
தாயும் விட்டு போவாள்
தந்தை விட்டு போவார்
உறவும் விட்டு போக இந்த
உலக நியதி தன்னில்.
இருக்கும் போது யார்க்கும்
அருமை புரிவதில்லை
இருட்டில் வெளிச்சம் தேடி
அலையும் போது தொல்லை.
காமமுறும் பருவம்
காதல் அறிவதில்லை
காதல் உடையவர்கு
ரத்த உறவின் உயர்வறிவதில்லை
ரத்த உறவு உடையவர்கு
இந்த உலகு புரிவதில்லை
உலகை அடைந்தவர்கள்
நிறை பரம்பொருளை அறிவதில்லை
ஆதரவற்றவன் அரவணைப்பை தேடுவான்
ஆழமாய் அதிலன்பை கொட்டுவான்
அப்படியே இந்த பிரபஞ்சந்தன்னில்
பிறப்பாய்
பாலாய்
இறப்பாய்
விருப்பாய்
வெறுப்பாய்
உறுப்பாய்
உயர்வாய்
தாழ்வாய்
நேற்றாய்
இன்றாய்
நாளையாய்
காலையாய்
மாலையாய்
ஆசையாய்
ஓசையாய்
கல்லாய்
புல்லாய்
சிலையாய்
கலையாய்
கிளையாய்
மரமாய்
வரமாய்
காமமாய்
ஊனமாய்
ஞானமாய்
தானமாய்
தாகமாய்
தர்மமாய்
தாக்கமாய்
ஏக்கமாய்
அளவாய்
அறிவாய்
நோக்கமாய்
நீக்கமாய்
எங்கும் நீக்கமற
யாதும் நீயென
நிறைந்து நிற்கிறாய் இறைவா...........
எல்லாம் ஆனவனே ஆனால் நீ
அதில்லில்லை
அறிவால் நாமுணரும் வரை
Comments