காதலில் காதல்

சிலர் என்னை தவறாய் எண்ண
நீ மட்டும் ஏன் தவமாய் ஏற்றாய்.
வலிக்கும் போதெல்லாம் 
வாழ்க்கை வழித்துணையாவது அவளன்பால்
தடுக்கி விழுகையில் 
தாங்கி பிடிப்பவளே‌.
மீசையை முறுக்கிவிட்டே 
எனக்கு மயக்கம் கொடுப்பவளே
விரல்களை கோர்த்து 
விடைகளை தந்தவளே.
விழி மோதி காயமுற்ற இதயத்தில்
காதல் மருந்தானவளே
பூவிதழ் போன்ற உன் இதழ்களினால்
என் இதழொரு பூலோகத்தை படைத்தவளே.
பைத்தியம் பிடித்த என்னுள்ளே 
காதல் பக்தி விதைத்தவளே
பட்டு போன செடியில் கூட
பட்டாம்பூச்சி அமர்ந்திடுமோ.
கார்குழலாடும் பேரழகி 
அவள் கருப்பு நிறத்தொரு கட்டழகி
வட்ட நிலவதும் பொலிவிழக்க
அன்பை பொழிந் திவள் அழகானாள்.
சரிகமபதநி தெரியவில்லை
அவளின் சிதறிய சிரிப்பினிலே
அபூர்வ ராகமது மௌன ராகமெனில்
அதற்கொரு கீதமாவ தவள் இதழ்கள் தான்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை