குமரிக்கடல்
அலைமோதும் பாறையின் மீது சிலையாக நான் அமர்ந்திடவே
மூன்று கடல் கூடும் இடம்
அதில் நெஞ்சம் மட்டும்
தன்னை மறந்து லயிக்கிறதே இயற்கையில் கணங்கள் கலந்து கவிக்கிறதே
வானுயர்ந்த வள்ளுவனை
வந்தடைந்தேன் அவர் காலடியில்
குறளின் வரிகளில் வாழும் குரலுக்கு
வடிவம் கண்ட பேருவகை இப்பேருலகில்.
வங்கமும் அரபியும் சங்கமிக்க
அதை எதிரொலித்து
இந்திய பெருங்கடல் கூச்சலிடும் அது
வீரத்துறவியின் காலை ஆரத்தழுவிவிடும்
இயற்கையின் தாய் மொழி தெரியவில்லை
அதன் முது மொழியும் புரியவில்லை
புது உரை பல அவள் தருகின்றாள்
அதன் பொருளை புத்திக்குள் விதைக்கின்றாள்
வானொடு வளியும் நீரும்
இந்த ஆளொடு மனதின் ஆழம் ஆளும்
நாளும் இங்கே வர ஆவல் கூடும்
கடல் தொட்டு கரை வீசும்
அந்தத் தென்றலின் இசையை மீண்டும் மீண்டும் கேட்கும்.
Comments