கண்
வாய்மொழி ஆயிரம் கதைத்தாலும்
விழித்திரை விடாது படமெடுக்கும்.
சட்டென பார்க்கும் போது
அந்த பார்வை
ஒரு பாவை
அவள் பார்வை
புது பிறவி தரும்.
விரும்பா பேச்சுக்கு
இமை விரிக்கும்
முறைத்தலில் பதிலுரைக்கும்.
இதழ் சிரிக்கா
சில நேரம்
இமை சிரிக்கும் .
புருவத்து புதிராகி
பருவத்து புதிர்களில்
பக்குவமாய் பயணிக்கும்.
மனக் குரலின்
மாய வடிவம்
காய உடலில்
கண் காணும் கனவே.
அங்குலத்து வெண் குளத்தில்
அங்குமிங்கும் அலைகிறது
மயிர் கரைகள் மூடுகையில்
உடலின் புதையலென புல படுகிறது.
ஒளியை விட கடந்தூடுருவும்
கையும் மெய்யும் தீண்டும் முன்
விழிகள் தீண்டும் அந்நிலையில்
தீண்டாமை விரோதத்திற்கு தீர்ப்பளிக்கும் நீதிமானே.
Comments