நான் நானே
நான் யார் என்பதற்கான
தீர்மானத்தை நீங்கள்
எப்படி எடுப்பீர் .
உங்கள் கண்ணும்
உங்கள் காதும்
உங்கள் வாயும்
உங்கள் சிந்தையும்
தரு மடையாளத்தை
எனக்கு எப்படி கொடுப்பீர்
நான் கருவில் ஒரு உயிர்
பிறந்ததும் ஒரு உடல்
என் அங்கத் தொகுப்பழைக்க பெயர்
கல்வி காலத்தது படிப்பு
பொருளீட்டும் தொழில்
சூழலை அணுகுமென் கருத்து
குடும்பத்தில் உறவு
இல்லறத்தில் பண்பு
பேறுற்றால் பெற்றோ னெனுங்கடமை
மரணத்தில் நானென்பதை யார் சொல்லுவார்
அந்த இறைவன் முன் அவன் தந்த விதிவிட்டு யார் விலகுவார்.
இவை உணர்ந்து
இவ்வுலகுலாவிடும் நான் நானே......
Comments