இருளென்ப ஒளியே ஒளியென்ப இருளே

 தெரியும் நீல வானம்

அதன் பின்னே உள்ளயாவும்
தெரியாது மறைந்து போகும்.

பச்சோந்தி நிறம் மாறும் 
இந்த விண்ணும் நிறம் மாறுமோ
என்ன, என்றாலு மிது 
அதிசயத்தின் உச்சமென ஆகுமோ

ஆவியாகும் நீர் கூட சாம்பல் மேகமாகுது
காலை மாலை இளங்கதிரும் வானை சிவப்பாக்குது
வானுக்கும் மானமுண்டு அதை தெரிவிக்க மேகமுண்டு

இருளுக்கு விடையாகி விடியலிங்கு வந்தாலும்
ஒளி வீசுங்கதிராலே கொல்லாமல் சுட்டாலும்
இருளையும் ஒளியையும் புகழ்பாடி தீர்தாலும்

அவ் விரண்டும் ஒன்றுக்குள் ஒன்றாகி
நமை‌ முட்டா ளாக்கி விடும் 
கதிரவனின் பின்புறத்தே 
ஒளியுண்டோ தெரியவில்லை 
கதிரவனே நெருங்க விரும்பும் காதலெது புரியவில்லை

பேரொளிக் குள்ளும் இருளுண்டு 
காரிருளுக்கும் சிறு ஒளி உண்டு 

வெற்றுக்கண் சூரிய காட்சி
சுற்றெல்லாம் இருளாக்கும்
சுற்றிருள் பழகும் விழிகளுக்கு 
சிறிதளவேனும் ஓர்  ஒளி கிடைக்கும்.

இருளென்ப ஒளியே ஒளியென்ப இருளே

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை