' மண் புழுவின் நண்பனுக்கு ' ' மண்ணுல பல தொல்ல '
வாடுது உசுறு
நிலத்துலையும்
உழவனுருவில் நிசத்துலயும்
கேடு நோக்கி ஓடும் இந்த பாரில் உள்ள நாடும்
அன்று விவசாயம் அரசாங்கத் தொழிலாக மாறும் அந்த காலம் வெகு தூரம் இல்லை
அதை எண்ணி உழைப்போமே நாளும்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே கல்யாணம்
அத விட்டு சொத்துதனை தேடுகிறான் நாளும்
நில மழிஞ்சு நாடாகும் அந்த ஒரு காலம்
அது விளைநிலத்தின் சுடுகாட்டில் நாம் வாழம் அலங்கோலம்.
விளை நிலத்தை
விலை நிலமாக்க
திட்டம் போடுறீங்க
மரங்செடி கொடியாக
விதையால வெளிவருங் செயலுக்கு
உழவெனும் பெயர மறந்து போகுறீங்க
உழவனை உதரித் தள்ளுறீங்க
வடிகாலும் வடிநீர் பாசனத்தையும் - அமைக்க
இங்க யாரு முன் வரீங்க.
ஏர் டிராக்டரான பின்னும்
ஏற்றமிங்க இல்ல
மண் புழுவின் நண்பனுக்கு
மண்ணுல பல தொல்ல
இதை எல்லாம் தாண்டி
நான் என்ன சொல்ல
நானும் உங்களில் ஒருவன் ஆனாலும்
வரும் வார்த்தையை கொல்ல மனம் இல்ல.
Comments