விதி
பயணம் முடிய
பாதை இணைத்திடும்
நம் வாழ்க்கை முடியும் வரை
புதுப் புது நட்பு கிடைப்பது போல்.
பயணம் செல்லும்
வாகனம் போல
நாம் இலக்குடன் சேர்ந்துப் புகழடைய
குறிக்கோள் வாகனச் சவாரி செய்வோம்.
வழிகாட்டி வழிநடக்க
வில் அம்பே நல்லவழி
வழிகாட்டும் வில்லே வளைந்தாலும் - அம்பாய்
வில்லின் குறி அடையச் சீரிப் பாய்ந்திடனும்.
வேகம் எனும் வார்த்தைக்கு
வடிவரிய வேண்டுமெனில்
ஒளியை பார்த்தறிந்து
ஓயாமல் உழைத்திடனும்.
வாழ்க்கை எனும் வாகனத்தில்
விதியின் வழிப் பயணத்தில்
நம் செய் வினைகள் நமக்காக - வழிகாட்டி
நம்மை திசை மாற்றுகிறான்
அதனால் தான் விதியவன்
தன்னை இறைவனெனப் பறை சாற்றுகிறான்.
Comments