எங்கே போகுதோ வாழ்க்கை

என்னடா வாழ்க்கை இது? 
எண்ணிப் பார்க்கும்போது அது 
சித்திரமா, விசித்திரம் போல் நெஞ்சுக்குள்ள நிற்கிறது

பல வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியமோ
இல்லை உறவுகளால் ஒன்றிணைந்த காவியமோ

சிலை வடித்திடும்
சிற்பி உளியாகிடுமோ
சிதைத்து விட்டு
செத்தவுடன் வித்தாக்கி போகிடுமோ

கடமையில் உடைமை 
உரிமையில் மடமை 
வளமை தருமந்த வலிமை 
அதில் எளிமை தானே இந்த இனிமை

தனிமை எனும் வரம் 
வரும் வரை வளமதை
மனமது பெரிதென 
மதியினில் விதைத்திடும்.

உதயத்தி லிருந்திடும் சூரியன்
மறைவினில் எங்கோ போகிறது

அதுபோல் தெளியா மனமும்
திரிந்தலைந்து‌ நிலையெது
என்பதை நினைத்து வாழ்வை
வாழ்ந்து முடித்து மடந்திட செய்கிறதே.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை