கண்டாலே கூறிடுவேன் இறைவனவன் எவனென்று

பரந்த உலகம் 
விரிந்து கிடக்குதே,

விழுந்த விதையை
பயிர் செய்வோம்,
ஆனந்த கண்ணீர் துளியில்
அழகிய நந்த வனமமைப்போமே !

மரஞ்செடி கொடியோ !
மனமயக்கும் மலர் வனமோ !
மூலிகை தாவரமோ !
உணவு வகை தானியமோ !

ருசியாலே பசி தீர்க்கும் ,
மருந்தாகி வாழவைக்கும்.
மலராகி போவதிலே,
இறைவனுக்கும், இறுதிக்கும்,
இப்பிறப்பை அர்ப்பணிக்கும்.

எத்தனை அழகு ,
இது யார் செய்த உலகு !
ஆயுளை அளித்தும்,
அழித்துமதில் விளையாடும்,

ஆற்றல் உடையவன் எவனோ,
அழியும் உலகில் 
நடக்கும் நிகழ்விதை,
நித்தம் அழிவறியா ரசிப்பவனை 
காணத் தான் வழியுமுன்டோ ?

கண்டாலே கூறிடுவேன் 
இறைவனவன் என்னென்று.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை