ஊன்று கோலின்றி நில்லுன் காலில்.
தடம் மாறித் தடுமாறும் பொழுது
தடையாக அதையும் கருது
தளர்வில்லா தெளிவாய் நடக்க
நிச்சயம் வசமாகும் வெற்றி நமது.
இடம் இன்றி வாழ்ந்தாலும்
இணமின்றி போனாலும்
வலியின்றி வாழ்வேது
வலிமையது வழிகாட்டும்
வரலாறும் பறைசாற்றும்.
நித்தம் உனக்கொரு
யுத்தம் வருவதை போலுணரும்
நெஞ்சதனில் வித்திட்டு
உழைப்பெனும் உரமிட்டு
ஊன்று கோல்
இன்றி நில்
உன் காலில்.
ஊக்கம் குறைந்தாலும்
ஏக்கம் நிறைந்தாலும்
தாக்கம் மாறாது
காக்கும் கடவுளவனுண்டு
முயற்சியின் வடிவில் அவனது அருளுண்டு.
Comments