அனுபவிக்க தவறாதீர், ஒன்றிலடக்கி ஒடுங்காதீர்
காலம் முழுதும் வாழ்ந்தாலும்
காதலின் அர்த்தம் தெரியாது,
உள்ளுணர்வை உணரத் தெரியாமல்
உலகே விடிந்து கிடந்தாலும்,
விடை தேடும் இருளாய் உலகிருக்கும்.
உறவுக்குள் வருமுரை யாடலெல்லாம்,
குத்திக் காட்டுவதாக எண்ணிடுவாய்.
புத்தி, செயல் குணமென எதிலும் தடுமாறிடுவாய்.
ஆசைகளை தட்டி எழுப்பிவிடும்
அதை மனங் காதலுக்குள்ளே புகுத்திவிடும் ,
புதைத்தது புத்துயிர் பெறவே
எதிர் பாலின ஈர்ப்பை
பெரிதாய் எதிர் பார்க்கும்.
ஆசைக்கும், இச்சைக்கும்
தேவைக்கும், தேடற்கும்
ஊடல், உறவுத் துறவுகளுக் கிடை இடிபட்டு ,
ஊரார் வார்த்தைகளில்
சிக்கி சிதைபட்டு ,
உடலுக்கும் உணர்வுக்கும்
நடுவில் நடக்கும்
பெரும் போரோ !
இல்லை இந்த உலகங் கொண்டாடும்
பாலினக் காதற் கோட்பாடோ ?
காதல் ஒரு வித
புது வித உணர்வு
புதிரான வாழ்வில்
புதிதாய் பிறக்கும் தெளிவு
அதை அனுபவிக்க தவறாதீர்
ஒன்றில் அடக்கி வைத்து ஒடுங்காதீர்.
Comments