ஒழுக்கம்

இனிமை இதுவென
தெரியாத வரையில்
எதுவும் எதுவரையென 
யாரு மறியாததால்.

இந்த சுயநல உலகம்
செய்யும் பொது நலங்களில் கலகம்
மக்கள் மனங்களை மறந்து
செயல்படவா கழகம்.

அனங் கவளழகும்
அதை காட் டிடுமவள் திலகம்,
அவள் கணவனின் உலகம்
தாய்மையில் அவள் மனமிளகும்.

கொடுமைகள் நடக்கும்,
அவதிகள் பிறக்கும்,
முடிவுகள் எடுக்கத்
தவறிடும் அரசில் ,
குடிக்குள் பல 
குழப்பங்கள் வெடிக்கும்.

விதியினை‍ மதியது வென்றிடுமாம்!
விதியது எதுவென தெரியாததுவே,
மதியதை மனமது மதியாததால் ,
இப்படியோரிடர் இருப்பதினாலதை ,
வென்றிட தானந்த தவவலிமை

எண்ணச் செயலை ஒழுங்காக்கும்,
அதிலெல்லா செயலும் சரியாகும்,
சரியாய் வாழ்வது யாவருக்கும் ,
எப்போதும் எங்கும் நலமாகும்

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

சாதி...

பிள்ளை