மனமது இதயத்தின் மறு உருவோ
சொல்லாத சுகங்கள் என்னை
பொல்லாத மிருகமாக்குது ,
துள்ளாத வயதும் கூட
துணிவோடு எகிரி குதிக்குது.
இல்லாத இன்பமதை தினம்
இருட்டுக்குள் மிரட்டித் தேடுது ,
ஆறடி போகும் உடலுமிங்கு
யாருக்காய் அது ஏங்கி தவிக்குது.
நாளு வாசலில் நாளும் துடிக்குது
ரத்த நாளங்களை சுத்திகரிக்குது ,
கையளவுள்ள இதயம் ஒன்றோ
காயக் காற்றை கையாள்கிறது.
மனமெனு மங்கம் இல்லா போதும்,
உணர்வாய் மாறி உயிரை வதைக்குது.
வாழ்வில் பாசம் வைத்து ஏமாறுவதில்,
பாடாய் பட்டுப் பைத்திய மாகுது.
வைத்தியம் பார்த்திட பெண்ணை தேடுது,
மருந்தாகும் காதல் மகத்துவ மானது.
மனமது இதயத்தின் மறு உருவோ ,
இது உயர் சிறப்புடைய நற்பிறப்போ !
Comments