கர்மத்தால் முக்தி
கர்மத்தால் பிறக்க
கர்ப்பத்தில் உயிர்கள் உதிக்கின்றன.
அது சொர்க்கத்தை அடைய
மரணத்தின் வரையும்
படாத பெரும்பாடு படுகின்றன.
உயிருக்குள் ஆத்மா
உலகில் உலாவி
மயிர் கொண்ட
உடலோடு அலைகின்றன.
மனமெனும் மாய
வலை கொண்ட மாந்தர்
வசமீர்க்கச் செய்யும் - செயல்களில்
வழுக்கி விழுகின்றன.
மான அவமானமின்றி
இணமானத்திற் கிழுக்கு தந்து
தன்மான மில்லாமல்
சன்மான மெதிர் பார்த்து
சங்கடம் தரும் செயல்கள் பல செய்ய,
சிலரின் சில செயல்பாடு
உளத்தில் நல்லன்போடு
உயிரும், உடலுறுப்பும் உள்ளது,
நல்லது செய்திட வென்றறிந்து,
செயலாற்றும் மனிதம் புனிதமே.
கருவான கர்மம்
பிறந்து புனிதத்தால்
கடையென முக்தி யடையட்டும்.
Comments