உயிரை உயர்த்தி பிடித்திடுவான்
அடங்கிட மறுக்கிறேன்
தொடங்கிட நினைக்கின்றேன்
மடிந்திட போகிற காலத்துல
விடிகிற இருளுக்குள்
முடிகிற வாழ்க்கைய
அறிகிற எண்ணம் யாருக்குமில்ல
தொடருர பாதையில்
நடக்குற கால்கள்
நகருரு ஊர்களை நினைப்பதில்ல
இறுதி வரைக்கும்
பயண மிருக்கும்
இலக்குகள் மட்டும் முடிவதில்ல
இங்க எத்தனை நாடு
எத்தனை வீடு
கடைசியில் எல்லோருக்கும் சுடுகாடு
அத்தனை பேரும் அன்பாய் வாழ
மயிரை அழகாய் திருத்தும் மனிதன்
மனதை திருத்தி வாழ்வானாயின்
உயிரை உயர்த்தி பிடித்திடுவான்
Comments