என் பாரதி
புதுமையான பாரதத் தமிழ்
புகழோடு தோன்றிட,
மாண்புடைய பெரு மொழியினத்தை,
மண்டியிட வைத்தோரை,
எம்மிணத்திற்காய் பிறந்தே னென, எட்டயபுரத்தி லுதித்தவனே !
கவி ஆனான் உலகுக்கு,
பிரசுர எழுத்தில் தன் கருத்தால்,
விடையானான் எதிரிக்கு.
அறிந்திருப்ப ரெவமுண்டு,
எதிரிகளை அவங்காலெட்டி,
உதைக்குமொப்ப அவன் வார்த்தைளால்,
விடுதலைக்கு விழித் தெழுந்த இணம், தன்மானங்கொண் டெழுங்காலம் வரை.
ஆண்டவ னுள்ளதை அவனுரைத்தான்,
மனிதனியற்றிய மூட நம்பிக்கைதனை வேரறுத்தே.
செல்விகளை, திருமதிகளை வீர பெண்களாய்,
பாரினில் அவன் (உரு)வாக்கி வைத்தான்,
ஆணுக் கழகையும் எடுத்துரைத்தான்.
போர்குணத் தொடு விஞ்ஞானமும்,
கற்பனை கன்னம்மா வொடு மெய்ஞானமும்.
தன்னுலகு, தன்னாடு, தன் மக்களென்றும்,
பாஞ்சாலியொடு, புதுமைப் பெண் தந்த பாரதி நீ,
கவி வழியே நயம்பாடி, நாடு வாழ வீடு காத்த வீரவன்.
Comments