துடிப்பும் தவிப்பும்
இதயமனியின் இனிய ஓசை
கதறும் ஆசையின்
கனிந்த மொழியா
உருண்டை தலைக்குள்
புரளும் எண்ணம்
புயலில் பறக்கும் புழுதித் துளியா
விழிக்கும் செவிக்கும்
இணைக்கும் அமைப்பது
நினைக்க மொழிக்க உதவிடுமா
தலையில் தொடங்கி
தரையில் முடிய
தினமும் பயணம் தொடர்ந்திடுமா
கரையில் அடங்கி
காற்றில் கலந்து
உயிரும் ஊசல் ஆடிடுமா
Comments