அப்பா அன்பே உனக்கு
சிந்தாதிரி பேட்டையில
அடுக்குமாடி கோட்டையில
சிகிச்சைகாக வந்தவங்க
சினேகிதமாகி போனாங்க
எது எங்க எப்படி நடக்கும்
தெரியாதே அவனோட கணக்கும்
ஆனாலும் உனக்கும் எனக்கும்
ஏதோவொரு தொடர்பது இருக்கும்
பத்து திங்கள் சுமந்தவளின்
பாசத்திற் குரியவனே
இருதிங்கள் மட்டும் தான்
உனக்காக உடனிருந்தேன்
சிரித்த பல நாள்கள்
சண்டையிட்ட சில நாள்கள்
அன்பை பகிர்ந்த
அழகான நாள்களவை
பழக்கம் ஒன்று நீ கொள்ள
பழிவாங்க உன் உயிர் கொல்ல
உருவெடுத்த உயிர் கொல்லி
உணவை தடுத்து உயிரை குடிக்குது..
உனக்கு பிள்ளையாய் நான் பிறந்திடவே
எந்த பிறப்பில் யான் செய்த தவமோ
என் அப்பா உனக்கு
என் அன்பே உனக்கு.
Comments