சத்திரம் பேசுதடி
கதிர் மறைந்த போது
நீலம் படர்ந்த வானில்
ஒளிர துவங்கும் மதியுடன்
மேகமற்ற வானமாய்
தோன்றும் சில நேரத்தில்
வெடித்து சிதறும்
மனமுடைய மனிதர்க்கு
மாலையாகும் வேளையில்
குளுமை தரும் வளியுடன்
வலி மறக்க வைத்திடும்.
அங்குமிங்குமாக
ஒளிர்ந்து மறைந்து விளையாடும்
சுற்றி இருள் சூழத் துவங்க
ஒளிரும் மின்மனி விளக்காய்
ஆங்காங்கே பிறக்கும்
அவை அந்தரத்தில் மிதக்கும்
சில நகர்ந்து கொண்டே இருக்கும்
இதனோடு இணைந்தவனை
நகரவிடாமல் வசமிழுக்கும்.
புரியாத புதிர் தொடுக்கும்
வான வெளி சத்திரத்தில்
நட்சத்திரம் சிரிக்கும்
பூமி வாழும் மனித கூட்டம்
வானம் பார்த்து வியக்கும்
சிதறிய வின்மீன்கள் எல்லாமும்
சிந்தனையை கொடுக்கும்
வீழும் சூழலிலும் மிதக்க - ஆசானாகும்
நாமதனிடம் அன்போடு கற்க.
Comments