கருவெண்மை (black and white)

வண்ணமில்லா காலம்
அழகை அறியவியலா மாந்தர்கள்!

அழகு காலை எது ?
அந்தி மாலை எது ?

நிறங்கள் பிரசவிக்கவில்லையோ !

சாம்பல் வண்ண சான்றுகளாய் 
காட்சி தரும் படங்களினை!

கண்களில் பூட்டி வைத்து 
காலத்தை பின்சுழற்ற
கற்பனையில் காவியமாய்!

எங்கெங்கு பார்த்தாலும்
கருவெண்மை ஓவிய காட்சி 
மனமோ செய்கிறது எண்ணங்களால்
வண்ணங்களில் ஆராய்ச்சி !!

பகலவனும்
பகலற்ற பொழுதுகளில் 
பகலவனிடம் கதிர் திருடி
எதிரொளித்திடும் மதி மாலை என
எல்லாமும் கரு வெண்மை நிறமாக

வடிவுள்ள வானவில்லுக்கு
கடந்த கால காட்சிகளில்
அழகூட்டும் வண்ணமே 
முகவரிக்காய்
கருவெண்மையின் கருவுக்குள் 
மரகத பச்சையுடன், 
மாணிக்க, மஞ்சள், நீலமாம்,
இளங் கதிரொளியென எல்லாமும்
அதனூடே இளைப்பாற குடிபுகுந் திருக்குமோ!


இப்படிக்கு

வண்ண நிழற்படங்கள் கூறும்
கருவெண்மையின் கருச் சுமை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை