உவகை
உவகை நிறைந்த உலகம்
உலகில் உயிர்கள் உலவி பறக்கும்
பறக்க துடிக்க எண்ணும் மனமே
மனமகிழ்வைத் தேடி திரியும்
மணக்கும் மல்லிகை இருக்கும்
இருந்தும் மணக்க மறக்கும்
மறந்து போகும் மனித மனங்கள்
மனமலைந்து அழிந்து போகும்
நிராகரித்து நம்மை நிதானபடுத்த
நிதானமற்ற மனிதர்களின் வார்த்தை
வார்த்தை குறைத்து மனதில்
மனவலிமை ஊட்டிச் செல்லும்
வலிகள் வர வழியும் நீர் விழியில்
விழியும் விரித்து களிக்கும் ஒரு நொடியில்
நொடி தான் நொடிக்கும்
நொடிக்குள் மனமது மறக்கும்
மறந்து எல்லாம் வல்லவனை நினைக்கையிலே.
Comments