மாய உலகம்
தனித்து வாழ விரும்பும் நானே
குடும்பங்களை பார்த்ததும் குதூகளிக்கிறேன்
குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறேன்
இச்சை கொள்கையில் இளித்து சிரிக்கிறேன்
நான் பேருக்கு மனிதன்
ஆனால் யாருக்கு கடவுள்
இணைப்பது காதல்
முடிப்பது மணம்
இனம் பெருக காமம்
அதில் நான்
கருமுட்டையின் உரு
விந்து நீரால் வந்த வசித்திரம்
மனம் அருந்தால் மனிதம்
மனமுருகக் கடவுள்
ஏனிந்த பிறப்பு ?
வாழ ஆசை இல்லாதவனுக்கு
ஏன் வாழை இலையில் வகைவகை உணவோ
ஏதோவென்று எடுத்து ருசித்தால்
எல்லாம் வேண்டும் என்றிடும் ஆசை
வேண்டவுமில்லை வெறுக்கவுமில்லை
முடிந்தால் போதும் இப்பிறப்பின் எல்லை.
Comments