இருள் தேர் இழுப்போம்
இருள் வரும் போதெல்லாம்
எனக்கான உலகம் பிறக்கிறது
காரிருளுள் தான்
எனக்கான பேரருள் கிடைக்கிறது
நாளெல்லாம் இசை கேட்கிறேன்
இரவோடு இசை தரும் இனிமை
நிழலோடு விளையாடும் பிள்ளை ன்
களிப்புக்கான உழைப்பின் மகிழ்வு
இருளில் தொடங்கும் தொடரிப் பயணமும்
எதிரில் மோதும் போர் காற்றும்
இசையாகி செய்யும் இம்சைகளோடு
மெல்லிசை கேட்கும் போதெல்லாம்
மனமும் மேன்மை அடைகிறது
தினமும் இதற்காய் அலைய தவிக்கிறது.
இருளில் இருக்கும் சுகந்தத்திற்காய்
பகலில் பாராருடன் பல போராட்டத்துடன்
நாளை நகர்த்திச் செல்வது
இருளெனும் தேரை இழுக்கவும் ரசிக்கவுமே.
Comments