என் அப்பா
அரைகுறை ஆடையுடன் அங்குமிங்கும்
நான் அலைகையிலே அதட்டியவர்
ஆடை உறுத்துதென அம்மனமாக கிடந்தார்
அப்போது உணர்ந்தேன் மரணம் மானப் பெரிதென
ருசி பார்க்கும் பலருக்குள்
உண்ணவியலா நேரம்
செவியை நா ஆக்கி ருசித்து ரசித்தவன்
செத்து பிழைத்தோர் எத்தனை போரோ
செத்து மடிந்தோர் எத்தனை பேரோ
பலர் செத்துக்கொண்டே வாழ்பவரோ
என செத்துக்கொண்டே உணர்த்தியவன்
மரணத்தருவாயில் ஆசி செய் என கேட்கையிலே
பெரு மூச்சு இழுத்து விட்டு
விண்ணுலகம் புறப்படவே
சொர்க்க ரதத்தில் சொகுசாக பயணித்து
சுடுகாட்டு சூட்டில் விண்நோக்கி சென்றான்
என் நெஞ்சாங் கூட்டில் நினைவாக நின்றான்.
Comments