இறப்பின் வெற்றி
கவலை கொள்ள
தேவை அல்ல
இருக்கும் பொழுது
இருப்பை மறந்து
அலைந்து திரிந்து
இழந்த பிறகு
நினைத்து தவித்து
மனம் வாட
இல்லை அவரினி
அன்புடன் நம்முடன் உறவாட
இல்லாத போது
பொல்லாத சோகம்
கொல்லாமல் கொல்லும்
இறுதி காலத்தில்
உறுதியாக நாமிருந்திருந்தால்
இச்சூழலை மனமது வெல்லும்
கவலையை கடந்து
இயங்கிட தொடர்ந்து
மனமும் துணியும்
வாழ்க்கை புரியும்
இறப்பே விடுதலை என்று
இருப்பில் வெறுப்பு கொள்ளும்
இறைவன் காலடி செல்ல
பிறப்பை இறப்பு வெல்லும்...........
Comments