முடியிலல்ல முடிவில்
குழலற்ற தலையை
கொஞ்சி குலவி
தீண்டும் தென்றல்
இதமாய் குளுமை தந்திடுதே
மயிர் கோதிய விரல்களெல்லாம்
தலை தடவும் பொழுதுகளில்
முட்களென உணருகிறேன்
மயிர் கால்கள் முளைப்பினிலே
உயிரோடு இருக்கும் வரை
உயரழகு என்பதெல்லாம்
உயரத்தில் முடியாய் முளைக்கிறது
உயர் முடிவெடுக்க முன்னோடி ஆகிறது
அழகு முடியினில் மட்டுமல்ல
முடிவுகளை நல்வழி முடிப்பதிலும் தான்.
Comments