சாளரம்
சாரல் வரும் வேளைகளில்
சாளரத்து கம்பிகளில்
கண்ணத்தை வைத்தவுடன்
கண் குறுகி பூரித்து விழித்திடும்
குளிரால் உளங்குதூகளித்திடும்
கொட்டும் மழையை விடச்
சொட்டாய் உதிர்ந்து
கம்பிகளில் தொங்கும்
வடி நீர்த்துளி வரிசைகளை
விரலாலே தடவி
பக்கத்தார் உருவத்தில்
பட்டென தெளித்து
இப்படியே மாறி மாறி
மாரியில் மகிழ்ந்திடுவோம்
தாழிட்ட கதவுகளை
வெளி ஆள் யாரோ
தாளமிட்டுத் தட்ட
யாரென குரலெழுப்பி
சந்தேக பதட்டங்களை
விழி சன்னல் வழி காண
தலை மட்டுங் காட்டி
காதலே கேட்க
கண்ட கண்ட சண்டைகளை
கண் மட்டும் பார்க்க
தக்தொரு வடிவமைப்பே
சாளரமாக்கிய ஆசாரி அவர் படைப்பே.
Comments