பெண்ணிலல்ல உன்னில்
அடைய விரும்புவதை
ஆழ்மனம் ரசிப்பதே காதல்
பெண்ணில் அல்ல உன்னில்
இது காலகால கொடுமை
ஆலகால நஞ்ச-ருந்திய
இறைவன் வந்து சொன்னாலும்
திருந்தாதது இந்த இளமை.
மோகமொரு யோகமென
வேகமுறு மாந்தருக்கு
சோகமென சோர்வு தரும்
உணர்வுகளின் உள்ளாட்சி
சொல்லாட்சி செய்யும் உலகத்தில்
சான்றோர் சொல் கேளாது செல்லும்
சொற்ப கூட்டமது அற்பத்தனமாய்
சுற்றம் பாராமல் சுற்றி திரிகிறது
இன்பமிதுவென்று அன்றை கழிக்கிறது
துன்பம் வரும்போது துடித்து தவிக்கிறது
பருவத்தில் முளைக்குங் காதல்
சோகத்தில் முடிந்தால் பக்குவமடையும்
பாவத்தில் முடிந்தால் மூச்சினை முறிக்கும்
உற்றவளுளம் புகுந்து உன்னுல கவளாகவும்
அவளுலகு நீயாகவும் மாறினால் போதும்.
காலங்கள் கூட சொல்லலாம்
காதலில் கூட வெல்லலாம்.
அடைய விரும்புவதை
ஆழ்மனம் ரசிப்பதே காதல்
பெண்ணில் அல்ல உன்னில்.
Comments