உறவால் குடும்பம்

ஆதியில் பிறக்கும் மனிதனுக்கு 
வாழ்க்கை பாதியிலே தான் தொடங்குது
மீதியை வாழ்ந்து முடித்தால் தானே
வாழ்வும் முழுமை அடையுது

கருவை காத்து சுமந்தவளுக்கும்
பேறு பெருகையில் வேரொரு கைவிரல் 
சுட்டிக் காட்டுதல் மட்டும் தானே
தன்சேய் என்று எண்ணத் தூண்டும்

தஞ்சேய்க்காய் அவள் பாசம் தந்தால்
பாசத்துடனே பசிக்கு பாலும் தந்தே
சேயின் மீது நேசம் காட்ட
சேயும் உணருங்காலத் தாயும் ஆனால்

தாயும் ஆனவள் தன் விரலாலே
சுட்டி காட்டும் பொழு தொன்றதிலே
உந்தன் தந்தை இவரே என்று 
அவனுக் குணர்த்தக் காரணமாகலாம்

அன்னை தந்தை பிள்ளை தொட்டு
இவை யத்தனையும் சுட்டிக் காட்டும் 
யாரோ ஒருவர் 
நம்மாழ் மனதுள்
நாமும் ஏற்க.

ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து
நம்பிக்கை எனும் பேருணர்வாலே
உருவாகிறது உறவால் குடும்பம்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை