வேற்றுமையில் ஒற்றுமை
வெற்றுச் சாலையில்
சிலர் வேகமாய் ஓடினர்
கையில் சிறு குச்சியுடன்
வேகமாய் ஓட்டினர்.
வடிவத்தில் வேறானாலும்
ஒற்றுமையின் இலக்கணத்தை
சீரான வேகத்தில்
சுழன்றோடிய விதத்தில்
ரோதை எனும் சக்கரத்தால்
பாதை போகும் போதிலே
சொல்லாமல் சொன்னார்கள்
மொழி
உயர
நிற
நாடோடு உடலாலும்
பிரிந்தோற்கும் புரியும்படி..
தன் மேலேறி தனை உதைத்து
தானும் கீழே விழுந்தாலும்
தாங்கி பிடித்தும்
தட்டி கொடுத்தும்
பாசம் தருவாள்
தாயைப் போலப்
புவியன்னை என...
Comments