இப்படி நடந்தால் எப்படி இருக்கும்

ஊரின் பேரிருக்கும் ஆனால்
ஊரிருக்காது
வயிற்றில் பசி இருந்தாலும்
சோறுமிருக்காது 
நா வறண்டு போனலும் நனைக்க
நீருமிருக்காது

உயிர் இருக்கும் 
உயிர் வளி இருக்குமா
பூமி இருக்கும் 
நாம் எங்கு இருப்போம்
நடந்து செல்லும் கால்கள் 
நாளை பறந்து செல்ல நேரிடுமா

எத்தனையோ தொழில் செய்கிறோம்
எதில் தான் பொய்யில்லை
உழவை தவிர உயர் தொழிலில்லை 
உயிருக்கிதைவிட உயர்வேதுமில்லை

இன்று கானகத்தில் வீடு கட்டி
காலத்தை கழிக்கிறோம் 
நாளை வீட்டின் மாடியிலேயே 
விவசாயம் செய்வோமோ

சேர்க்கை இல்லாமலே 
செயற்கை கரு உருவாகிறது
இனி கருவுக்கு பதிலாக 
கருவி உருவாகிடுமோ

தாலி கட்டி கொள்ளாமல்
கல்யாணம் செய்யாமல் 
காலம் மாறி போகிவிட்டால்
காமம் காணமல் போகிடுமோ

அறிவியல் கூட 
ஆணின்றி கரு சுமக்க
பெண்ணுக்கு உதவிடுமோ
அறிந்து கொள்வோம் 
ஆணாக இருப்பதற்கே
நாளை அறிவியலே 
துணை ஆகிவிட்டால்...

அடக்கி ஆண்டு
அடிமை படுத்தாதே

திருத்திக் கொள் புனிதா
திருந்தாத மனிதா

மனிதனெனும் படைப்புமினி
தொழிலாக மாறிவிட்டால்
அக்காலம் எப்படியோ...

இப்படியாய் வெடிக்கிறது 
துடிக்கிற என் இதயமிங்கு.

என்று
எங்கு 
ஏன் 
யாருக்காய் இப்பிறப்பு...

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை