உதிரத்துளி
பயணத்தில் பார்த்த பணிகள்
பயனுள்ளதாய் உணர்ந்த விழிகள்!
பாடு பட்டு உழப்பவரே
எப்பாடு பட்டேனும்
உழவுத் தொழில் செய்பவரோ
கழனியைப் பதமாக்க
நீரூற்றிச் சேறாக்கி
உழுது நில வளங்கூட்டி
உயிரி உரமிட்டு
வித்தைப் புதைத்து
வித்தும் புத்துயிர்ப் பெற்று
முளைவிட்டு வளர
உயிருக்கு உணவளித்து
அழகுக்கு மலரளித்து
மூலிகைத் தாவரமாய்க்
காலத்து கனி தரும் மரமாகி
வேளாண் தொழிலின் பலமாகும்
அனைத்தும் உழவனின் உதிரத் துளியாகும்.
Comments