இயற்கையின் இதயதுடிப்பு
காலில் மிதி பட்டு
காற்றில் அலைந்து
தலையில் அழுக்காய்
ஆடையில் புழுதியாய்த் தூசியும்
நித்தம் வாசல் பெறுக்கினாலும்
குப்பையுடன் தான் கிடக்கும்.
இதமாய் உணருந்தென்றலின்
மொழி விதமாவதை யாரது அறிவது
அறிவிற் சிறிய மனிதருக்கு
அறிவுரை கூறும் இயற்கையிடம்
ஆவேசம் நிறைந்திருக்கும்
அதன் பெருங்கோபமிங்கு பதிலுரைக்கும்.
காற்று ஓலமிடும்
மரங்கள் போர் புரியும்
கார் மேகத் துதிரமும்
கண்ணீர் விட்டு அழும்
சூறைக்காற்று போரில்
உயிர் நீத்த மேகத்தின்
தியாகத்தால் உருமாறி
சிற்றறிவு மனிதருக்கு
காட்டாற்று வெள்ளமென
புயற்காற்றுப் பூதமென
பேரலை உமிழ்வென
சீற்றத்தாற் பாடமெடுத்து
சீர் செய்து சீராகிறது
இயற்கையின் இதயத் துடிப்பும் இங்கு.
Comments