நண்பகல்
காலணி தொலைத்த கவலையில்
கால்கள் எங்கோ போகுது
வலுவிழந்த வேளையிலே
வான் முகில் வாழ்க்கையைத் தந்தது.
சூரிய ஒளியால்
சாலைகள் கால்களில்
செய்கிற யுத்தம் ஆக
அக்கினிக் கோலத்து
ஆகாயச் சூரியனோ
நடுவானம் ஏறி வெறுங்காலில்
நடப்போரைக் காரித் துப்ப
தார்ச் சாலையைத்
தன் வாயாக மாற்றி
கால்களில் காயம் செய்யும்
காலைக் கண் வணங்கும்
கதிரவனின் காலக் கோலம்
நிழல் தேடித் திரியுமிந்த
செருப்பில்லா வெற்றுக்கால்
நடக்குமிம் மதிய நேரம்.
Comments