மதுவே உயிரே
கலப்படமடைந்து
கைக் கோர்த்துக் கலந்து நின்று
வெளியில் விழிப் பார்த்தவற்றை
வழிமறித்ததால் வாயடைத்தேன்
ஆயிரமாயிர ஓட்டைகளுடைய
வானின் மானம் காப்பாற்றப் பட்டாலும்
மதியிழந்து மதுகுடித்த முகில்கள்
மதியை எதிர்க்கப் போர்த் தொடுத்தாலும்
குடி குடியைக் கெடுக்க
குடிப்பழக்கம் உயிரைக் கெடுப்பதாய்
மதுவோடு உயிரும்
மண்ணாகிப் போச்சு,
புதைந்த விதைக்கு
பாடமெடுத்து உயிரூட்ட.
மதுவே கதியாய்
மதுவே விதியாய்
மதுவே உயிராய்
தானும் வாழ்ந்து
பிறர் வாழ - மழையாகிறது
கார் முகில்.
Comments